செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி
செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி | |
---|---|
மகானந்தா வனவிலங்கு சரணாலயத்தில் ஆண் இருவாய்ச்சி | |
மகானந்தா வனவிலங்கு சரணாலயத்தில் பெண் இருவாய்ச்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | புசெரோதிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | அசெரசு
|
இனம்: | அ. நிபாலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
அசெரசு நிபாலென்சிசு (கோட்ஜ்சன், 1829)[2] |
செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி (Rufous-necked hornbill-அசெரசு நிபாலென்சிசு) என்பது பூட்டான், வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம், இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் இருவாய்ச்சி சிற்றினமாகும். வேட்டையாடுதல் மற்றும் குறிப்பிடத்தக்க வாழ்விட இழப்பு காரணமாக இது நேபாளத்தில் அழிந்துவிட்டது.[1] காடுகளில் 10,000க்கும் குறைவான முதிர்வடைந்த பறவைகள் உள்ளனர்.[3] சுமார் 117 செமீ (46 செமீ) நீளத்துடன்[3] இது மிகப்பெரிய புசெரோட்டின் இருவாய்ச்சிகளில் ஒன்றாகும். ஆண்களில் அடிப்பகுதி, கழுத்து மற்றும் தலை ஆகியவை செம்பழுப்பு நிறமி செறிந்து காணப்படும். ஆனால் பெண் பறவைகளில் இப்பகுதி கரு நிறத்தில் இருக்கும்.
வகைப்பாட்டியல்
[தொகு]1829ஆம் ஆண்டில் ஆங்கில இயற்கை ஆர்வலர் பிரையன் ஹாக்டன் கோட்ஜன் என்பவரால் புசெரோசு நிபாலென்சிசு என்ற அறிவியல் பெயர் உருவாக்கப்பட்டது. இவர் நேபாளத்தில் உள்ள சால் காடுகளில் வேட்டைக்காரர்களால் பிடிக்கப்பட்ட பல செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சிகளை விவரித்தார்.[2] இந்த சிற்றினம் 1844ஆம் ஆண்டில் ஹோட்சனால், ஏசரோசு பேரினத்தில் வைக்கப்பட்டது.[4] பேரினத்தின் பெயரின் ஆசிரியர் சில நேரங்களில் ஜான் எட்வர்ட் கிரே என வரவு வைக்கப்பட்டார். ஆனால் கிரே இந்த வகைப்பட்டியலின் ஆசிரியர் அல்ல, தொகுப்பாசிரியர் ஆவார்.[5] இந்த பேரினத்தின் பெயர் பண்டைக் கிரேக்க அகெரோசு என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் "கொம்பற்றது" என்பதாகும்.[6]
விளக்கம்
[தொகு]ஆண் பறவைகளின் தலை, கழுத்து மற்றும் கீழ் உடல் ஆகியவை செம்பழுப்பு நிறத்தில் உள்ளன. பக்கவாட்டு மற்றும் வயிற்றுப் பகுதி அடர் நிறத்தில் உள்ளது. நடுவில் மற்றும் வாலின் கீழ்ப் பாதியில் உள்ள இறகுகளின் முனை வெண்மையாக உள்ளன. இருவாய்ச்சியின் மீதமுள்ள இறகுகள் பளபளப்பான அடர் பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளன. கீழ் வாலில் மறைந்து காணப்படும் இறகுகள் கருப்பு கலந்த வண்ண கசுக்கொட்டை நிறத்திலிருக்கும்.[7] பெண் இருவாய்ச்சி அதன் வால் மற்றும் நடுவிலுள்ள முதன்மை சிறகுகளின் முனைகளின் நுனிகள் தவிரக் கருமை நிறத்திலிருக்கும். இளம் இருவாய்ச்சி முதிர்வடைந்த இருவாய்ச்சிகளைப் போன்று காணப்படும். ஆனால் மேல் அலகின் அடிப்பகுதியில் முகடுகள் இல்லை. அலகின் அடிப்பகுதி தடிமனாக உள்ளது. இது மேல் அலகில் பல அடர் முகடுகளைக் கொண்டுள்ளது. இவை இளம் வயதினரிடையே இல்லை.[7]
பரவலும் வாழிடமும்
[தொகு]வடகிழக்கு இந்தியா, மத்திய பூட்டான் முதல் மேற்கு தாய்லாந்து மற்றும் வடமேற்கு வியட்நாம் வரை வடக்கே செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி பரவலாகா காணப்படுகிறது. இது 1,163,811 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இதில் 825,837 சதுர கி. மீ. பகுதி காடுகளாக உள்ளது. இந்தப் பகுதிக்குள், 54,955 சதுர கி. மீ. 90 பாதுகாக்கப்பட்ட பகுதியினை உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்கிறது. இப்பகுதி இந்த இருவாய்ச்சியின் வாழ்விடத்தின் 7% மட்டுமே அடங்கும்.[8]:238 மேற்கு வங்கத்தில் உள்ள மகானந்தா வனவிலங்கு சரணாலயம் இதன் மேற்கு எல்லையைக் குறிக்கிறது. செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி புக்சா புலிகள் காப்பகம், மனாசு தேசியப் பூங்கா, ஈகிள்னெஸ்ட் வனவிலங்கு சரணாலயம், செஸ்ஸா ஆர்க்கிட் சரணாலயம், கம்லங் வனவிலங்கு சரணாலயம், நம்தாபா தேசிய பூங்கா[9] மற்றும் பக்கே புலிகள் காப்பகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[10]
செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி பெரும்பாலும் மலைப்பாங்கான முகடுகளுடன் கூடிய காடுகளில் வாழ்கிறது. இங்கு முதன்மையாக மிதமான அகலமான இலை மற்றும் கலப்பு காடுகள் 150 முதல் 2,200 மீட்டர் உயரத்தில் வாழ்கின்றன.[1] இது வறண்ட வனப்பகுதிகளிலும் வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.[3]
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சியின் கூடு கட்டும் காலம் மார்ச் முதல் சூன் வரை ஆகும். இது உயரமான பரந்த சுற்றளவைக் கொண்ட மரங்களை விரும்புகின்றன. இந்த இருவாய்ச்சி சமூகங்கள் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப மாறும் பழம் தரும் மரங்களிலிருந்து தீவனத்திற்கு பருவகாலத்தைப் பொறுத்து காட்டின் இடையே நகர்கின்றன.[3] இதனுடைய முட்டையை ஹியூம் (1889) கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றார்.[11]
- முட்டை ஒரு பரந்த முட்டை வடிவிலானது, ஒரு முனையை நோக்கி ஓரளவு சுருக்கி, சற்று பைரிஃபார்மாக இருக்கும். ஓடு வலுவானது மற்றும் தடிமனாக இருக்கிறது; ஆனால் கரடுமுரடான மற்றும் முற்றிலும் பளபளப்பற்றது, எல்லா இடங்களிலும் நுண்ணிய துளைகளால் ஆனது. நிறத்தில் இது மிகவும் அழுக்கு வெள்ளை, வெளிர் அழுக்கு மஞ்சள் நிறத்துடன், மற்றும் எல்லா இடங்களிலும் தெளிவற்ற முறையில், நெருக்கமாக ஆராயும்போது, நுண்ணிய தூய்மையான வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். இது 2 .25 முதல் 25 செ.மீ. நீளமுடையது.
பாதுகாப்பு
[தொகு]ஏற்கனவே செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்து வரும் உயிரினங்களில் பன்னாட்டு வர்த்தகம் பற்றிய மாநாட்டு பின் இணைப்பு I-இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இனம் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் பூட்டானில் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது.[3] வரம்பு மற்றும் அளவு பற்றி வரும் அதிகரித்த தகவல்கள் காரணமாக, செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் "அருகிய இனமாக" என்பதிலிருந்து "அச்சுறு நிலையை அண்மித்த இனம்" என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[8]:234
இந்திய வனவிலங்கு அறக்கட்டளை, அருணாசலப் பிரதேச வனத்துறை மற்றும் பிற குடிமக்கள் இருவாய்ச்சிகளைப் பாதுகாப்பதற்கான சமீபத்திய முயற்சிகள், செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சிகளையும் கருத்தில் கொண்டுள்ளன. இவை இருவாய்ச்சி கூடுகளைத் தத்தெடுப்பு திட்டம் மற்றும் இருவாய்ச்சி அலகுகளைத் தவிர்த்து நாரினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட அலகினைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளன.[10][12]
கலாச்சாரத்தில்
[தொகு]செம்பழுப்பு கழுத்து இருவாய்ச்சி, சமசுகிருத இலக்கியத்தில் வர்த்ரினாசா என்ற புனைபெயரின் கீழ்க் காணப்படுகிறது. இது சில நேரங்களில் பிற புசெரோடிடேயையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[13]
அருணாச்சலப் பிரதேசத்தில், பழங்குடியினரால் இவற்றின் இறகுகள் மற்றும் அலகுகளுக்கான வேட்டையாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 BirdLife International (2020). "Aceros nipalensis". IUCN Red List of Threatened Species 2020: e.T22682510A176267243. https://www.iucnredlist.org/species/22682510/176267243. பார்த்த நாள்: 26 January 2022.
- ↑ 2.0 2.1 Hodgson, B. H. (1833). "On a new species of Buceros". Asiatic Researches 18 (2): 178–186. https://archive.org/details/asiaticresearche181833cal/page/n213/mode/2up.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 BirdLife Species Factsheet
- ↑ Hodgson, Brian Houghton (1844). "Catalogue of Nipalese Birds, collected between 1824 and 1844 by B.H. Hodgson, Esq.". In Gray, John Edward (ed.). The Zoological Miscellany. London: Treuttel, Wurtz and Co. pp. 81–86 [85].
- ↑ Dickinson, E.C.; Walters, M. (2006). "Systematic notes on Asian birds. 53. The authorship and date of publication of the "Catalogue of the Specimens and Drawings of Mammalia and Birds of Nepal and Thibet presented by B.H. Hodgson, Esq. to the British Museum"". Zoologische Mededelingen 80: 137–153. https://repository.naturalis.nl/pub/209994/.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ 7.0 7.1 Blanford, W. T.; Oates, E. W. (1889–98). The fauna of British India, including Ceylon and Burma. Birds. Vol. 3. London: Taylor and Francis. pp. 149–150. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.8366. பார்க்கப்பட்ட நாள் 4 April 2012.
- ↑ 8.0 8.1 Kinnaird, M. & O'Brien, T. G. (2007). The Ecology and Conservation of Asian Hornbills: Farmers of the Forest. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-43712-5.
- ↑ Ghose, D.; Lobo, P.; Ghose, N. (2006). "A record of the Rufous-necked Hornbill Aceros nipalensis from West Bengal, India". Indian Birds 2 (2): 37–38. http://indianbirds.in/pdfs/IB2.2_GhoseETAL_RNHornbill.pdf.
- ↑ 10.0 10.1 PTI (2012). "Artificial beaks save hornbills from extinction in Arunachal". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2012-04-04.
- ↑ Hume, Allan Octavian (1889–1890). Oates, Eugene William (ed.). The nests and eggs of Indian birds, volume III. Vol. 3 (Second ed.). London: R. H. Porter. pp. 77–79. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.17497. பார்க்கப்பட்ட நாள் 4 April 2012.
- ↑ WTI staff (7 May 2004). "This beak does not bite". Wildlife Trust of India - News. Wildlife Trust of India. பார்க்கப்பட்ட நாள் 14 April 2012.
- ↑ Dave, K. N. (2005). Birds in Sanskrit literature. Motilal Banarsidass. p. 510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1842-2.